பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட போடூர் அடுக்குமாடி குடியிருப்பு RTI பதில்கள் 2026
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட போடூர் பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 30 கேள்விக்கு பெறப்பட்ட 30 பதில்களை இங்கு இணைத்துள்ளேன் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் (ஒப்புகை அடையாளப்படுத்தப்பட்ட கூடிய பதிவு அஞ்சல்) Petition No : MKA/01 அனுப்புநர்: மு.க. அண்ணாமலை, MSW பெரும்பாலை அஞ்சல் – பென்னாகரம் வட்டம், தருமபுரி மாவட்டம் – 636811. பெறுநர்: பொது தகவல் அலுவலர் / கோட்டப் பொறியாளர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், 3/2, நாராயணசாமி தெரு, பொறியாளர், சேலம் – 636007. பொருள்: தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன் கீழ் – தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி, போடூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் தொடர்பான நிர்வாக, நிதி, பயனாளி தேர்வு, கட்டுமான தரம், ஒதுக்கீடு மற்றும் பராமரிப்பு தொடர்பான முழுமையான தகவல்கள் கோரி மனு – தொடர்பாக. மதிப்பிற்குரிய ஐயா / அம்மா, தகவல்...