பென்னாகரம் பேரூராட்சி போடூர் அடுக்குமாடி குடியிருப்பு RTI Petition 2026 TNUHDB Scheme
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ன் கீழ் விண்ணப்பம் (ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல்) Petition No : MKA / 01 அனுப்புநர் : உங்கள் முகவரி பெறுநர் : பொதுத் தகவல் அலுவலர் / கோட்டப் பொறியாளர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், 3/2, நாராயணசாமி தெரு,பெரமனூர், சேலம் – 636007. பொருள் : தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1) ன் கீழ் – தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி, போடூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் தொடர்பான நிர்வாக, நிதி, பயனாளி தேர்வு, கட்டுமான தரம், ஒதுக்கீடு மற்றும் பராமரிப்பு தொடர்பான முழுமையான தகவல்கள் கோரி மனு – தொடர்பாக.., மதிப்பிற்குரிய ஐயா / அம்மா, தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 6(1)-ன் கீழ், தருமபுரி மாவட்டம் - பென்னாகரம் பேரூராட்சி - போடூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டம்...