Voice of Pennagaram
பென்னாகரம் தொகுதியின் குரலாய் ஒலிக்கும் "Voice of Pennagaram" இணையதளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்!
அன்பார்ந்த பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம்.
தமிழ்நாடு மாநிலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள நமது பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியின் அடிப்படைத் தேவைகள், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், மற்றும் சமூக மாற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான கருத்துக்களை ஒரே இடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு பாலமாக இந்த "Voice of Pennagaram" இணையதளம் இன்று முதல் தனது பயணத்தைத் தொடங்குகிறது.
இந்தத் தளத்தின் முதன்மை நோக்கங்கள்:
மக்கள் பிரச்சினைகள்:
நமது தொகுதியில் உள்ள 46 ஊராட்சிகள் மற்றும் 2 பேரூராட்சிகளில் உள்ள மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை அரசு மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லுதல்.
அரசுத் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை:
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் பெறப்படும் அதிகாரப்பூர்வ அரசுத் தகவல்கள், நிதிகள் மற்றும் திட்டங்களின் உண்மை நிலவரங்களை மக்களிடம் நேரடியாகப் பகிர்வது.
சமூகப் பணிகள்:
அதிகாரம் இல்லாமலும், ஒரு சமூக செயற்பாட்டாளராக நாம் களத்தில் நின்று செய்த மற்றும் செய்து வரும் மக்கள் பணிகளின் தொகுப்பு.
ஒரு சமூகப் பணியாளராக (MSW), அதிகார வர்க்கத்திற்கும் அடித்தட்டு மக்களுக்குமான இடைவெளியைக் குறைப்பதும் மேலும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது எனது லட்சியம். அதற்கு இந்த இணையதளம் ஒரு வலுவான ஆயுதமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
தொகுதியின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்!
இப்படிக்கு, மு.க.அண்ணாமலை MSW சமூக செயற்பாட்டாளர், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி.

Comments
Post a Comment