பென்னாகரம் பேரூராட்சி போடூர் அடுக்குமாடி குடியிருப்பு RTI Petition 2026 TNUHDB Scheme
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ன் கீழ் விண்ணப்பம்
(ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல்)
Petition No : MKA / 01
அனுப்புநர் :
உங்கள் முகவரி
பெறுநர் :
பொதுத் தகவல் அலுவலர் / கோட்டப் பொறியாளர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்,
3/2, நாராயணசாமி தெரு,பெரமனூர், சேலம் – 636007.
பொருள் :
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1) ன் கீழ் – தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி, போடூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் தொடர்பான நிர்வாக, நிதி, பயனாளி தேர்வு, கட்டுமான தரம், ஒதுக்கீடு மற்றும் பராமரிப்பு தொடர்பான முழுமையான தகவல்கள் கோரி மனு – தொடர்பாக..,
மதிப்பிற்குரிய ஐயா / அம்மா,
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 6(1)-ன் கீழ், தருமபுரி மாவட்டம் - பென்னாகரம் பேரூராட்சி - போடூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் தொடர்பாக கீழ்க்கண்ட தகவல்களை சான்று நகல்களுடன் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் அலுவலகத்தில் தகுந்த தகவல்கள் இல்லையெனில் RTI Act 2005 Section 6(3) தகவல்கள் உள்ள அலுவலகத்திற்கு மாறுதல் செய்யப்பட்டு தகுந்த தகவல்களை பெற்று தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கண்ட அனைத்து தகவல்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ன் படி சான்று நகல்களுடன் 30 நாட்களுக்குள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1.தருமபுரி மாவட்டம்,பென்னாகரம் பேரூராட்சி போடூர் பகுதியில் செயல்படுத்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் முழுப் பெயர், திட்ட எண், திட்ட வகை மற்றும் திட்டத்தின் தற்போதைய நிலை பற்றிய தகவல்கள்
2.இந்த திட்டம் எந்த அரசுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது மேலும் அதன் விபரங்கள்.
3.திட்டத்திற்கான அரசாணை (G.O.) எண், தேதி மற்றும் அதன் நகலை வழங்கவும்.
4.திட்டத்திற்கு நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்ட ஆவணங்களின் நகலை வழங்கவும்.
5.திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் Survey Number, மொத்த பரப்பளவு மற்றும் நில உரிமை விவரங்களை வழங்கவும்.
6.திட்டத்தின் மொத்த மதிப்பீட்டு தொகை விபரங்கள்
மத்திய அரசு நிதி ,மாநில அரசு நிதி,உள்ளாட்சி அமைப்பு பங்கு,பயனாளி பங்கு,பிற நிதி ஆதாரங்கள் ஆகிய விவரங்களை தனித்தனியாக வழங்கவும்.
7.திட்டத்திற்காக இதுவரை விடுவிக்கப்பட்ட நிதி மற்றும் செலவிடப்பட்ட தொகை விவரங்களை ஆண்டு வாரியாக வழங்கவும்.
8.கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் / நிறுவனம் பெயர், முகவரி, Tender Number, Tender Copy மற்றும் ஒப்பந்த நகலை வழங்கவும்.
9.ஒப்பந்த நிறுவனத்திற்கு எதிராக அபராதம் / Blacklist / Show Cause Notice வழங்கப்பட்டிருந்தால் அதன் நகலை வழங்கவும்.
10.பணிகள் தாமதமானால் விதிக்கப்பட்ட அபராத விவரங்கள் மற்றும் அது தொடர்பான கோப்புகளை வழங்கவும்.
11.திட்டத்தில் மொத்தமாக எத்தனை பிளாக்குகள் (Block) மற்றும் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
12.ஒவ்வொரு பிளாக்கிலும் உள்ள வீடுகளின் எண்ணிக்கை, தளம் வாரியான விவரங்கள் மற்றும் வீட்டு பரப்பளவை வழங்கவும்.
13.கட்டுமான பணிகள் தொடங்கிய தேதி மற்றும் நிறைவு பெற்ற தேதி மற்றும் கட்டுமான தரத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் பெயர், பதவி மற்றும் ஆய்வு அறிக்கைகளின் நகலை வழங்கவும்.
14.Structural Stability Certificate, Quality Certificate மற்றும் Completion Certificate நகல்களை வழங்கவும்.
15.கட்டிடங்களில் விரிசல், மழைநீர் கசிவு, சுவர் சேதம், கழிவுநீர் பிரச்சினை உள்ளிட்ட குறைகள் பதிவாகியுள்ளதெனில் அதன் முழு விவரங்களையும் வழங்கவும்.
16.கட்டுமான பணிகள் IS Standard / PWD Norms படி செய்யப்பட்டது என்பதை உறுதி செய்யும் கோப்புகளை வழங்கவும்.
17.வீடு பெற விண்ணப்பித்த மொத்த விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை மேலும் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர் பட்டியல் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டு எண் விவரங்களை வழங்கவும்.
18.பயனாளிகள் தேர்வு செய்யப்பட்ட அடிப்படை தகுதிகள் மற்றும் தேர்வு நடைமுறை வழிகாட்டுதல் நகலை வழங்கவும்.
19.அரசு பிரதிநிதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பரிந்துரையின் அடிப்படையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதெனில் அவர்கள் பரிந்துரைத்த கடிதங்கள் மேலும் அது சார்ந்த கோப்பு குறிப்புகளின் நகல்களை வழங்கவும்.
20.தற்போது காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை மற்றும் வீட்டு எண் பட்டியலை வழங்கவும்.
21.ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதா அல்லது வேறு நபர்கள் வசிக்கிறார்களா என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளதெனில் அதன் அறிக்கைகளின் நகலை வழங்கவும்.
22.ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளில் எத்தனை குடும்பங்கள் தற்போது அங்கு வசித்து வருகின்றனர்.
23.குடிநீர், மின்சாரம், கழிவுநீர் வடிகால், தெருவிளக்கு, சாலை, மழைநீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களை வழங்கவும்.
24.குடியிருப்பில் தற்போது அடிப்படை வசதிகளில் குறைகள் இருந்தால் அது தொடர்பான கோப்புகளை வழங்கவும்.
25.கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் மற்றும் அதற்காக செலவிடப்பட்ட தொகை விவரங்களை வழங்கவும்.
26.Lift, Motor, Water Tank, EB Connection போன்ற பொதுப் பயன்பாட்டு வசதிகளின் தற்போதைய நிலையை வழங்கவும்.
27.பொதுமக்கள் / பயனாளிகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை மேலும் அதன் நகல்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அறிக்கைகளின் விவரங்களை வழங்கவும்.
28.இந்த திட்டம் தொடர்பாக Vigilance, DVAC, Lokayukta அல்லது நீதிமன்ற வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதெனில் அதன் விவரங்களை வழங்கவும்.
29.RTI மனுக்கள் முன்பு பெறப்பட்டுள்ளதெனில் அதற்கான பதில் நகல்களை வழங்கவும்.
30.இந்த திட்டம் தொடர்பாக சமூக ஆய்வு (Social Audit) அல்லது Third Party Inspection மேற்கொள்ளப்பட்டதெனில் அதன் அறிக்கையை வழங்கவும்.
தகவல்கள் மறுக்கப்பட்டால் RTI Act 2005 Section 8 மற்றும் 9 ன் கீழ் மறுக்கும் காரணங்களை எழுத்து மூலம் தெரிவிக்கவும்.
விண்ணப்பக் கட்டணமாக பத்து ரூபாய்க்கான நீதிமன்றவில்லை ஒட்டியுள்ளேன் மேலும் அரசு விதிமுறைப்படி ஒரு பக்கத்திற்கு (A4 size) ரூபாய் 2/- வீதம் நகல் கட்டணம் (Xerox Cost) செலுத்துவதற்கு தயாராக உள்ளேன்.
மேல்முறையீட்டு அலுவலரின் பெயர் மற்றும் முழு முகவரியை வழங்கவும்.
நன்றி
தேதி : 20 /05/2026, இப்படிக்கு,
இடம் : பெரும்பாலை.






Comments
Post a Comment